search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருமான வரி அதிகாரிகள்"

    தனது வீட்டில் எந்த நேரத்திலும் வருமான வரி சோதனை நடைபெறலாம் எனவும், அவர்களை வரவேற்க காத்திருப்பதாகவும் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். #PChidambaram #ITRaids
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே சோதனை நடத்தி, பல கோடி ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்துள்ளனர்.



    இதேபோல் முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகளை குறிவைத்து வருமான வரி சோதனை நடப்பதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்நிலையில், முன்னாள் மத்திய நிதி மந்திரி தனது டுவிட்டர் பதிவில், தனது வீட்டில் எந்த நேரத்திலும் வருமான வரி சோதனை நடக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

    “எனக்குக் கிடைத்த தகவல்: என்னுடைய சென்னை மற்றும் மானகிரி வீடுகளில் வருமான வரி இலாகாவின் சோதனை எந்த நேரத்திலும் நடக்கலாம். வருமான வரி அதிகாரிகளை நாங்கள் வரவேற்க காத்திருக்கிறோம். எங்கள் தேர்தல் பணிகளை முடக்கவே இந்த நடவடிக்கை என்பது எல்லோருக்கும்  தெரிந்த செய்திதான். இந்த அரசின் அத்து மீறல்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நாளன்று சரியான பாடம் புகட்டுவார்கள்” என டுவிட் செய்துள்ளார் ப.சிதம்பரம். #PChidambaram #ITRaids
    டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் உள்ள தனியார் லாக்கர்களை திறந்து வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனையில் இதுவரை 30.4 கோடி ரூபாய் சிக்கி உள்ளது. #DelhiITRaid #ChandniChowk
    புதுடெல்லி:

    டெல்லியில் சாந்தினி சவுக் பகுதியில் ஹவாலா பணப்பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்த வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.  தனியாருக்கு சொந்தமான லாக்கர்களில் ஹவாலா தரகர்கள் தங்கள் பணத்தை வைப்பதும் அதை அடுத்தவர்கள் எடுத்துச் செல்வதும் வழக்கமாக இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்குள்ள லாக்கர்கள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது.



    இந்த சோதனையில் கட்டுக்கட்டாக, புதிய 2000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். இன்று மேலும் 5 லாக்கர்கள் திறக்கப்பட்டு அதில் இருந்த 5.4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 30.4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இன்னும் 175 லாக்கர்கள் திறக்கப்படாமல் உள்ளதாகவும், அவை திறக்கப்பட்டால் மேலும் பல கோடி பணம் சிக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. #DelhiITRaid #ChandniChowk

    ×